ஷி ச்சின்பிங்கின் கட்டுரை ச்சியூஷி இதழில் வெளியீடு
2022-11-30 19:02:33

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை ஒன்று டிசம்பர் முதல் நாள் ச்சியூஷி இதழில் வெளியாக உள்ளது.

சோஷலிச நவீனமயமாக்கத்தைக் கட்டியமைப்பதன் புதிய கட்டத்தையும், 2வது நூற்றாண்டு இலக்கையும் நோக்கி, கட்சி மற்றும் நாட்டின் பல்வேறு தேசிய இன மக்கள் முன்னேறும் முக்கிய காலத்தில் நடத்தப்பட்ட மிகவும் முக்கிய மாநாடாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு திகழ்கிறது. சர்வதேசச் சமூகத்தின் பெரும் கவனத்தை இது ஈர்த்துள்ளது என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19வது மத்திய கமிட்டியின் 7வது முழு அமர்வின் 2வது கூட்டத்தில் உரை என்ற தலைப்பிலான இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டு அறிக்கையில், சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சூழ்நிலை ஆய்வு செய்யப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளில் பணிகள் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் மாபெரும் மாற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், சோஷலிச நவீனமயமாக்க நாட்டுக்கான பன்முகக் கட்டுமானத்துக்கும், சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சிக்கான முன்னேற்றத்துக்கும் இது தொலைநோக்குத் திட்டத்தை வழங்கியுள்ளது. புதிய யுகத்தில் கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சி மற்றும் 2வது நூற்றாண்டு இலக்கை நனவாக்குவதற்கும் இம்மாநாடு வழிகாட்டலை வழங்கியுள்ளது என்றும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.