பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் பற்றிய ஐ.நா. நினைவுக் கூட்டம்
2022-11-30 14:26:03

நவம்பர் 29ஆம் நாளன்று, பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை தினம் பற்றிய நினைவு கூட்டம் ஐ.நா.வில் நடைபெற்றது. இந்த நினைவுக்கூட்டத்திற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அனுப்பிய செய்தியில் கூறுகையில்,

பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அமைதியான சகவாழ்வு இரு தரப்புகளின் நீண்டகால நலன்களுக்குப் பொருந்தியது. இது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் பொது எதிர்பார்ப்பாகும். 

பாலஸ்தீனம் தனது பொருளாதாரத்தை வளர்த்து, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் பாலஸ்தீனத்துக்கு மனித நேய மற்றும் வளர்ச்சி உதவிகளைச் சீனா முன்பு போலவே வழங்கும். சர்வதேசச் சமூகத்துடன் இணைந்து, மத்திய கிழக்குப் பிரதேசத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பை நனவாக்கும் வகையில் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.