லாவோஸ் அரசுத் தலைவருடன் சிறப்பு நேர்காணல்
2022-11-30 16:24:21

 

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், லாவோஸ் அரசுத் தலைவர் தொங்லூன் சிசோலித் 2021ஆம் ஆண்டின் இறுதியில் காணொளி பேச்சுவார்த்தை நடத்தி, சீன-லாவோஸ் இருப்புப்பாதையின் திறப்பு விழாவில் பங்கெடுத்தனர். போக்குவரத்துக்கு இந்த இருப்புப்பாதை வந்த பிறகு, உள்ளூர் மக்களின் வாழ்க்கையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன?

இக்கேள்விக்கு தொங்லூன் சிசோலித் பதிலளிக்கையில், இதற்கு முன் லாவோஸில் தர நிர்ணய இருப்புப்பாதை இல்லை. தற்போது இந்த நவீன இருப்புப்பாதை லாவோஸ் நாட்டுக்கும் லாவோஸ் மக்களுக்கும் பெருமையைக் கொண்டு வந்துள்ளது. இரண்டாவதாக, நிலம் சூழ்ந்த நாடான லாவோஸில் கடலுக்குச் செல்லும் கழிமுகம் இல்லை. இந்த இருப்புப்பாதை மூலம், கடலுக்குச் செல்லும் பொருள் புழக்க வலைப்பின்னலை லாவோஸ் கொண்டிருக்கும். பிரதேசத்திலுள்ள இதர நாடுகளுக்கு வசதியுடன் செல்ல முடியும் என்பதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் சரக்குப் போக்குவரத்துக்கும் துணைபுரியும். இதன் விளைவாக மேலதிக முதலீட்டாளர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் லாவோஸுக்கு ஈர்க்கப்படுவர். மூன்றாவதாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இருப்புப்பாதை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கீழ் உள்ளது. இந்த முன்மொழிவை ஆதரித்து செயல்படுத்தும் லாவோஸ் இதிலிருந்து பல நன்மைகளைப் பெற்றுள்ளது. எனது கருத்தில், லாவோஸ், சீன-லாவோஸ் இருப்புப்பாதையின் முற்றுப்புள்ளி அல்ல. எதிர்காலத்தில் இந்த இருப்புப்பாதை ஆசியானின் பல்வேறு நாடுகளிலும் நீட்டிக்கப்படும். அப்போது, சீனா மற்றும் லாவோஸ் இடையேயான ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறக் கூடிய உறவு மேலும் பெரும் முன்னேற்றம் அடையும் என்று தெரிவித்தார்.