சி919 விமானத்தை ஓட்டும் தகுதியைப் பெற்ற 15 விமானிகள்
2022-11-30 11:28:21

சீனாவில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட சி919 ரக பயணியர் விமானம் அண்மையில் டி5 சோதனையை முடித்து கொண்டுள்ளது. குறிப்பாக, இந்த ரக விமானத்தை ஓட்டும் தகுதியை 15 விமான ஓட்டுந‌ர்கள் பெற்றுள்ளனர்.  சி919 விமானம் வணிக ரீதியில் செயல்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட உள்ளதை இது குறிக்கிறது.

விமான பறப்புக்கான தரநிர்ணயக் குழுவின் கீழுள்ள விமான ரகங்களின் மதிப்பீடுப் பயிற்சிப் பரிசோதனைக்கு டி5 சோதனை என சுருக்கமாக அழைக்கப்படும். இந்தச் சோதனை, புதிய ரக விமானம் குறித்த மதிப்பீடுகளில் மிகவும் முக்கிய பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.