பதற்றமான சர்வதேச நிலைமையில் முக்கியத்துவம் பெறும் சீன-ஐரோப்பிய ஒத்துழைப்பு
2022-12-02 11:00:28

சர்வதேச நிலைமை பதற்றமாகி வரும் சூழலில், அதிக அறைகூவல்களுக்கு மத்தியில் உலகுக்கு சீன-ஐரோப்பிய உறவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. டிசம்பர் முதல் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் ஐரோப்பிய பேரவையின் தலைவர் மிஷேலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சி குறித்து ஷிச்சின்பிங் 4 முன்மொழிவுகளைத் தெரிவித்ததுடன்  சீன பாணி நவீனமயமாக்கலின் வளர்ச்சிப் பாதையில் ஐரோப்பிய பேரவை சீனாவின் முக்கிய கூட்டாளியாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

புவிசார் அரசியல் பதற்ற நிலை மற்றும் மந்தமான பொருளாதார நிலைமையில் மிஷேலின் இந்த பயணம் ஐரோப்பிய-சீன உறவின் வளர்ச்சிக்கு உரிய வாய்ப்பு என்று ஐரோப்பிய பேரவையின் இணையத்தில் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த சில காலங்களில் சில அரசியல்வாதிகள் சீனாவுடனான போட்டியை மிகைப்படுத்திச் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட்டனர். சீனாவுடன் பனிப் போர் நடத்துமாறு பிற நாடுகளைக் கேட்டுக் கொண்டனர். இது சீன-ஐரோப்பிய உறவுக்கு மட்டுமல்ல ஐரோப்பாவின் உரிமைகளுக்கும் தீங்கு விளைவித்துள்ளது.

சரியான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். கருத்து வேற்றுமைகளை உகந்த முறையில் களைக்க வேண்டும். உயர் தர ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் ஆகிய சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த 4 முன்மொழிவுகள் சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சிக்குப் பொருத்தமாக உள்ளன.

ஒரே சீனா என்ற கொள்கையைக் கடைப்பிடித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம் என்று மிஷேல் உறுதி அளித்தார். ஐரோப்பிய ஒன்றியம் அளித்துள்ள வாக்குறுதிகள் நடைமுறைக்கு வந்தால் இரு தரப்பு உறவு வலுவான அரசியல் அடிப்படையைப் பெறும். 

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு சீன-ஐரோப்பிய உறவின் ஆதாரத் தூணாகும். இவ்வாண்டின் முதல் 10 திங்களில் இரு தரப்பு வர்த்தகம் 71140 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய வர்த்தக நாடாக சீனா தொடர்ந்து விளங்கி வருகிறது. அதேபோல், ஐரோப்பிய ஒன்றியம் சீனாவின் 2ஆவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும்.

சீனாவின் தொடர்ச்சியான திறப்புக் கொள்கை ஐரோப்பாவுக்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தரப்பின் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை புதிய நிலைக்கு கொண்டு சென்றால் இருதரப்புகளுக்கும் மேலதிக வாய்ப்புகள் கிடைப்பதுடன் உலகத்திலும் நிலைத்தன்மை ஏற்படும் என்று சீனா எதிர்பார்க்கிறது.