அமெரிக்க இராணுவ நிறுவனங்களின் விற்பனை அதிகம்
2022-12-06 10:07:27

ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதிக்கான ஆய்வகம் டிசம்பர் 5ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், உலகளாவிய ஆயுத உற்பத்தி மற்றும் இராணுவச் சேவைக்கான 100 முன்னணி நிறுவனங்களின் பட்டியலில், அமெரிக்க நிறுவனங்களின் எண்ணிக்கை 40. 2021ஆம் ஆண்டு 100 முன்னணி நிறுவனங்களின் மொத்த விற்பனை மதிப்பில் அமெரிக்க நிறுவனங்களின் விற்பனை 50 விழுக்காட்டுக்கும் மேல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு உலகளாவிய ஆயுத உற்பத்தி மற்றும் இராணுவச் சேவைக்கான 100 முன்னணி நிறுவனங்களின் மொத்த விற்பனை 59200 கோடி அமெரிக்க டாலராகும். 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட 1.9 விழுக்காடு அதிகம். அவற்றில் 40 அமெரிக்க நிறுவனங்களின் மொத்த விற்பனை 29900 கோடி அமெரிக்க டாலராகும். மேலும், 2018ஆம் ஆண்டு முதல், இப்பட்டியலில் முதல் 5 நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.