மியான்மர் ஏறக்குறைய 8 மாதங்களில், விவசாய ஏற்றுமதி மூலம் 228 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது!
2022-12-06 16:56:15

ஏப்ரல் மாதம் தொடங்கிய 2022-2023 நிதியாண்டில் கிட்டத்தட்ட எட்டு மாதங்களில் மியான்மர், விவசாய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 228 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளது என்று அந்நாட்டின் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் விவசாய பொருட்கள், விலங்கு பொருட்கள், கடல் பொருட்கள், கனிமங்கள், வனப் பொருட்கள், உற்பத்தி பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் அடங்கும். நாட்டின் ஏற்றுமதியில் பெரும்பாலானவை விவசாய பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் ஆகும்.

சீனா, தாய்லாந்து, வங்கதேசம் மற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு, மியான்மர் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது.