செயற்கை நுண்ணறிவு மற்றும் கல்வி கூட்டம் நடைபெற்றது
2022-12-06 10:30:16

2022 சர்வதேச செயற்கை நுண்ணறிவு மற்றும் கல்வி கூட்டம் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் இணையம் வழியாக நடைபெற்றது. சீன கல்வி அமைச்சகமும் யுனெஸ்கோ அமைப்பும் கூட்டாக நடத்திய இக்கூட்டம் உலக அளவில் நேரலை செய்யப்பட்டது.

கல்வி துறையின் எண்ணியல் மயமாக்க நெடுநோக்கு திட்டத்தை செயற்கை நுண்ணறிவு முன்னேற்றுவது, உலக கூட்டுறவின் மூலம் தொலைவான மற்றும் பின்தாங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட பல கருப்பொருட்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. 10க்கும் மேலான நாடுகளின் கல்வி அமைச்சர்கள், யுனெஸ்கோ அமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தொடர்புடைய சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் கல்வித்துறையின் நிபுணர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

சீனா-யுனெஸ்கோ இணைந்து ஏற்படுத்திய இக்கூட்டம், செயற்கை நுண்ணறிவு மற்றும் கல்வி துறையின் சர்வதேச தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு மேடையாகத் திகழ்கின்றது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக இக்கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.