ரஷியாவிலிருந்து எண்ணெய் தொடர்ந்து கொள்முதல் செய்யும்:இந்தியா
2022-12-06 11:00:21

ஜெர்மனி வெளியுறவு அமைச்சர்  அன்னலெனா பேர்பாக்  டிசம்பர் 5ஆம் நாள் இந்தியாவில் பயணம் மேற்கொண்டார். ரஷிய எண்ணெய் மீதான விலை வரம்பு விதிக்குள் இந்தியாவை கொண்டு வர முயல்வது, அவரின் இப்பயணத்தின் நோக்கங்களில் ஒன்று.

சொந்த எரிசக்தி தேவைக்கிணங்க, எதிர்காலத்தில் இந்தியா ரஷியாவிலிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதாக பேர்பாக்வுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ரஷிய-உக்ரைன் மோதல் ஏற்பட்ட பின், ரஷியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் வாங்கிய எரிபொருள் இந்தியா வாங்கியதை விட மேலும் அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

மேற்கத்திய நாடுகள் ரஷிய கச்சா எண்ணெய்க்கு விலை உச்ச வரம்பு நிர்ணயித்துள்ளதால், இந்தியாவுக்குப் பாதிப்பு ஏதும் இல்லை. தேவையின்படி, எந்த நாட்டில் இருந்தும் இந்தியா எண்ணெய் வாங்கும் என்று அதே நாள் இந்திய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.