சீனாவின் இராணுவ மற்றும் பாதுகாப்பு வளர்ச்சி
2022-12-06 16:52:52

2022ஆம் ஆண்டின் சீனாவின் இராணுவ மற்றும் பாதுகாப்பு வளர்ச்சி பற்றிய அறிக்கையை அண்மையில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. இதில் சீனப் பாதுகாப்புக் கொள்கை மற்றும் இராணுவ நெடுநோக்குத் திட்டத்தை அமெரிக்கா திரித்துப் புரட்டி, தைவான் பிரச்சினையில் சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடுகின்றது. இதற்கு வன்மையான மனநிறைவின்மையுடன் சீனா அமெரிக்காவுக்குக் கடும் எதிர்ப்பையும் தெரிவித்தது.

அமைதியான வளர்ச்சியின் பாதையில் சீனா ஊன்றி நின்று, தற்காப்புத் தன்மை வாய்ந்த தேசிய பாதுகாப்புக் கொள்கையைப் பின்பற்றுகின்றது. உலக அமைதியை உருவாக்குபவராகவும் உலகளாவிய வளர்ச்சியின் பங்களிப்பவராகவும், சர்வதேச ஒழுங்கின் பாதுகாவலராகவும் சீனா எப்போதும் இருக்கின்றது. அமெரிக்காவே உலகத்தில் பிளவுகளையும் மோதல்களையும் உருவாக்குகிறது. அமெரிக்கா உருவாக்கப்பட்ட கடந்த ஏறக்குறைய 250 ஆண்டுகளில் 16 ஆண்டுகள் மட்டுமே இது போர் தொடுக்கவில்லை. உலக அமைதி மற்றும் நிதானத்தை அழிப்பவர் அமெரிக்கா என்பதை பல உண்மைகள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளன.