பொருளாதாரத்துக்கு ஆதரவான வைப்பு விகிதக் குறைப்பு
2022-12-06 10:14:00

சீன மக்கள் வங்கி டிசம்பர் 5ஆம் நாள் நிதி நிறுவனங்களின் வைப்புத் தொகை விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைத்தது. இவ்வாண்டில் இவ்விகிதம் 2ஆவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சுமார் 50 ஆயிரம் கோடி யுவான் நீண்டகால நிதித் தொகை புழக்கத்தில் வரும்.

வைப்பு விகிதத்தைக் குறைப்பது, சீரான சந்தை புழக்கத்தையும், பணம் மற்றும் கடன் மொத்த தொகையின் சீரான வளர்ச்சியையும் நிலைநிறுத்தவும், உண்மை பொருளாதாரத்துக்கான ஆதரவுகளை அதிகரிக்கவும் உதவும். இதனிடையே, நிதி நிறுவனங்களின் நீண்டகால மற்றும் நிலையான நிதி ஆதாரமும் அதிகரிக்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.