ஜியாங் சேமினுக்கு நினைவஞ்சலி
2022-12-06 11:10:25

நவம்பர் 30ஆம் நாள் காலமான ஜியாங் சேமினுக்கான நினைவஞ்சலி கூட்டம் டிசம்பர் 6ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

மக்கள் மாமண்டபத்திலுள்ள அனைவரும் இக்கூட்டத்தின் தொடக்கத்தில் ஜியாங் சேமினுக்கு 3 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.