2022 சீன-அரபு ஊடக ஒத்துழைப்பு கருத்தரங்கு
2022-12-07 15:59:14

2022ஆம் ஆண்டிற்கான சீன-அரபு ஊடக ஒத்துழைப்பு கருத்தரங்கு சீன ஊடக குழுமம் மற்றும் சௌதி அரேபிய செய்தி துறையின் கூட்டு ஏற்பாட்டில் டிசம்பர் 5ஆம் நாள் லியாட் நகரில் நடைபெற்றது. சீனா மற்றும் 22 அரபு நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சௌதி அரேபிய வணிக அமைச்சரும் தற்காலிக செய்தி துறை அமைச்சருமான மஜித் அல்-கசாபி காணொளி வழியாக உரை நிகழ்த்துகையில், பல்வேறு துறைகளில் கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்கான நம்பத்தக்க கூட்டாளியாக சீனா அரபு நாடுகளால் கருதப்படுகிறது. இருதரப்பு ஊடகங்கள் கருத்தரங்கின் விளைவுகளைச் செயல்படுத்தி, அரபு-சீன ஒத்துழைப்புக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹாய்சியோங் உரை நிகழ்த்துகையில், சீன ஊடகக் குழுமம் நடப்பு கருத்தரங்கை வாய்ப்பாக கொண்டு, அரபு நாடுகளின் பல்வேறு துறைகளுடன் தொடர்புகளை ஆழமாக்கி, யதார்த்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலகளாவிய வளர்ச்சி முன்மொழிவு மற்றும் உலகளாவிய பாதுகாப்பு முன்மொழிவைச் செயல்படுத்தி, சீன-அரபு கூட்டுறவு உயர்நிலைக்கு முன்னேற உதவும் அதேவேளை, புதிய யுகத்தில் சீன-அரபு பொது சமூகத்தின் கட்டுமானம் மற்றும் மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்துக்கும் பங்காற்றும் என்று தெரிவித்தார்.

மேலும், சீன-அரபு நாடுகள் ஊடக தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான முன்மொழிவு இக்கருத்தரங்கின் முக்கிய சாதனையாக வெளியிடப்பட்டது.