நடைபெறவுள்ள கோப் 15 மாநாட்டின் 2ஆவகு கட்ட கூட்டம்
2022-12-07 12:16:11

கோப் 15 எனும் உயிரின பல்வகைமை பற்றிய ஐ.நாவின் பொது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தரப்புகளின் 15ஆவது மாநாட்டின் 2ஆவது கட்ட கூட்டம் டிசம்பர் 7ஆம் நாள் கனடாவின் மாண்ட்ரீலில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு முன்பாக, மாநாட்டுத் தலைவரும் சீனச் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல்  அமைச்சருமான ஹுவாங் ருன்ஜியு, ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ், கனட அரசுத் தலைவர் ட்ரூடோ ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

6ஆம் நாள் காலை இக்கூட்டத்தின் முதல் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஹுவாங் ருன்ஜியு கூறுகையில்,

கோப் 15 மாநாட்டின் தலைமை நாடான சீனா, தொடர்ந்து முயற்சியுடன் தலைமை பங்கினை வெளிகொணர்ந்து, பல்வேறு தரப்புககளுக்கிடையே ஒற்றுமை எட்டுவதற்குப் பாடுபட்டு, உலக பல்லுயிர் பாதுகாப்பை முன்னேற்றி, பூமி உயிர்களின் பொது சமூகம் மற்றும் அனைத்தும் இணக்கமாக இருக்கும் அழகான தாயகத்தின் கட்டுமானத்தில் ஈடுபடும் என்றார்.