சின்கான் மாவட்டத்தில் ஆரஞ்சுப்பழம் தொழில்
2022-12-07 13:25:27

சீனாவின் ஜியாங்சி மாநிலத்தின் சின்கான் மாவட்டத்தில் ஆரஞ்சுப்பழ உற்பத்தி தொழில் பெரிதும் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆரஞ்சுப்பழம் தொழிலின் வளர்ச்சியை முன்னேற்றும் விதம், உள்ளூர் அரசு பல்வேறு கொள்கைகளை வெளியிட்டு, சிறப்பு நிதியுதவியை வழங்கி, வேளாண் பள்ளிகளுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், தற்போது வரை இம்மாவட்டத்தில் ஆரஞ்சுப்பழம் வளர்க்கப்பட்டுள்ள நிலப்பரப்பு சுமார் 480 ஹெக்டரை எட்டியுள்ளது.