சீன முன்னாள் அரசுத் தலைவர் ஜியாங் சேமினுக்கு பல உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்
2022-12-07 16:43:50

சீனாவின் முன்னாள் அரசுத் தலைவர் ஜியாங் சேமினின் மறைவு குறித்து பல உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்கு தொலைபேசி, கடிதங்கள் மற்றும் பிற வழிகளில் தொடர்ந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.

 அவர்களில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் இடம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.