வெற்றிகரமாக செலுத்தப்பட்ட குவெய்ச்சோ-11 Y2 ஏவூர்தி
2022-12-07 12:47:49

டிசம்பர் 7ஆம் நாள் காலை 9:15 மணியளவில், சீனாவின் குவெய்ச்சோ-11 Y2 ஏவூர்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம், விடிஇஎஸ் எனும் செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையில் அனுப்பப்பட்டது. விடிஇஎஸ் மற்றும் ஏஐஎஸ் அமைப்புமுறையின் தொலைதொடர்பு சோதனையிலும், முக்கிய தொழில் நுட்பச் சரிபாப்பிலும் இச்செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும்.

இது, குவெய்ச்சோ தொகுதி ஏவூர்தியின் 23ஆவது முறை பயணக்கடமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.