சீன-அரபு நாடுகளிடையில் பிரிக்கப்பட முடியாத நம்பிக்கை
2022-12-07 18:31:16

சீனா, 12 அரபு நாடுகள் மற்றும் அரபு நாடுகள் லீக்குடன் நெடுநோக்கு அல்லது பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை உருவாக்கியுள்ளது. சீனாவுக்கும் அரபு நாடுகளுக்குமிடையிலுள்ள நம்பிக்கை, பிரிக்கப்பட முடியாது. பணம் மூலம் வாங்கப்பட முடியாது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2016ஆம் ஆண்டின் ஜனவரி அரபு நாடுகள் லீக்கின் தலைமையகத்தில் தெரிவித்தார்.

கத்தார் உலக கோப்பை நடைபெறும் முன், மனித உரிமை என்ற சாக்குப்போக்கைச் சொன்ன சில மேலை நாடுகள், அரசியல் புறக்கணிப்பைப் பறைச்சாற்றியுள்ளன. அப்போது சீனா, கத்தாருக்கு உறுதியான ஆதரவு அளித்து, பல்வகை வழிமுறைகளில் உலக கோப்பையின் ஏற்பாட்டுக்கு உதவியளிப்பதன் மூலம், விளையாட்டை அரசியல்மயமாக்குவதை எதிர்க்கிறது.

இவ்வாண்டு ஆக்ஸ்ட், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவை தலைவர் பெலோசி சீனாவின் தைவானில் பயணம் மேற்கொண்ட போது, அனைத்து 22 அரபு நாடுகளும், ஒரே சீனா கொள்கையை மீண்டும் வலியுறுத்தின. அவற்றில் 18 அரபு நாடுகளின் அரசு வெளிப்படையாக, சீனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இவ்வாண்டின் இறுதி காலத்தில் உயர்நிலை சீன-அரபு நாடுகள் தூதாண்மை நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், இவ்விரு தரப்பின் ஒத்துழைப்பு, புதிய கட்டத்தில் காலடியெடுப்பதை மக்கள் எதிர்பார்க்கிறனர்.