முதலாவது இந்திய-மத்திய ஆசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டம்
2022-12-07 11:18:08

இந்தியாவின் ஏற்பாட்டில், முதலாவது இந்திய-மத்திய ஆசிய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கூட்டம் டிசம்பர் 6ஆம் நாள் புதுதில்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறுகையில், மத்திய ஆசிய நாடுகளுடனான இணைப்பைத் தொடர்ந்து பேணிக்காப்பது இந்தியாவின் முதன்மையான பணியாகும் என்று தெரிவித்தார்.

கசகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜ்கிஸ்தான், உஸ்பேகிஸ்தான் ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகளை வரவேற்று பேசிய அவர், அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமையான மத்திய ஆசியா, எங்கள் பொது நலனுக்குப் பொருத்தமானது என்றும், இப்பிரதேசத்தில் ஒத்துழைப்பு மேற்கொண்டு, முதலீடு செய்யவும் தொடர்பு கொள்ளவும் இந்தியா தயாராகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஆப்கனின் பாதுகாப்பு நிலைமை பற்றி குறிப்பிடுகையில், ஆப்கன் விவகாரம் அனைத்து தரப்புகளுடனும் தொடர்புடைய முக்கிய விவகாரமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.