இலங்கையின் பொருளாதார மீட்சி பற்றிய கூட்டம்
2022-12-07 12:19:16

தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, இலங்கைக்கு ஒருங்கிணைந்த உதவி திட்டம் தேவை என்பதை சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஒப்பு கொண்டுள்ளதாக இலங்கை அரசுத் தலைவரின் ஊடகப் பிரிவு டிசம்பர் 6ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள், இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் கொழும்புவில்  6ஆம் நாள் வட்ட மேசை விவாதம் நடத்திய பிறகு இது குறித்து உடன்பட்டனர்.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி திட்டத்தை விக்கிரமசிங்கே இக்கூட்டத்தில் அறிமுகம் செய்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.