நோய் தடுப்பில் படைத்த சாதனைகள் நெடுநோக்கு திட்டத்தின் மேம்பாட்டுக்கு ஆதரவு
2022-12-08 16:52:25

அண்மையில் நோய் தடுப்பு மேம்பாட்டுக்கான 10 புதிய நடவடிக்கைகளை சீனா வெளியிட்டுள்ளது. அது பற்றி சீனத் தேசியச் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய ஆணையத்தின் தலைமை குழு தலைவர் லியாங் வேன் நியேன் கூறுகையில், கடந்த 3 ஆண்டுக்காலத்தில் சீனா மேற்கொண்ட முயற்சிகள், கோடிக்கணக்கான மக்களை தொற்றிலிருந்து காத்து, சர்வதேச சமூகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளது. தற்போது ஒமிக்ரொன் திரிபு ஏற்படுத்தும் நோய் பாதிப்பு பெரிதும் குறைந்துள்ளது. நோய்க்கான தடுப்பூசி பெருமளவில் போடப்பட்டுள்ளது. தவிரவும் மக்களின் நோய் தடுப்பு திறன் அதிகரித்துள்ளது. இவையெல்லாம், நோய் தடுப்பு திட்டத்தின் மேம்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்தது என்று தெரிவித்தார்.