சீனா மற்றும் சௌதி அரேபியாவின் வளர்ச்சிப் பாதை
2022-12-08 18:54:57

பொருளாதாரச் சீர்திருத்தப் போக்கில் சீனா மற்றும் சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஒருமித்த திசையும் நோக்கமும் உள்ளன.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2016ஆம் ஆண்டில் அரபு நாடுகள் லீக் தலைமையகத்தில் மத்திய கிழக்குக் கொள்கை குறித்து சொற்பொழிவாற்றினார். மத்திய கிழக்குப் பிரச்சனையைத் தீர்ப்பது பற்றி சீனாவின் கருத்தை அவர் விளக்கிக் கூறினார். வளர்ச்சி, கொந்தளிப்பான மத்திய கிழக்குப் பகுதியின் இறுதி வழிமுறையாகும் என்று அவர் கூறினார்.

பொருளாதார ஒத்துழைப்பின் மூலம் அரபு நாடுகளுடன் தொடர்பு கொண்டு, பொருளாதார மற்றும் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதன் மூலம், சீனா மற்றும் அரபு நாடுகளின் வளர்ச்சியை மேம்படுத்தச் சீனா பாடுபட்டு வருகின்றது.