18ஆவது பெய்ஜிங்-டோக்கியோ மன்றக் கூட்டம்
2022-12-08 11:35:23

உலக அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பைப் பேணிக்காப்பதில் சீனா, ஜப்பான் ஆகிய இருநாடுகளின் பொறுப்பு என்ற தலைப்பில், 18ஆவது பெய்ஜிங்-டோக்கியோ மன்றக் கூட்டம் டிசம்பர் 7, 8 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அமைதி ஒழுங்கைப் பேணிக்காப்பது, அரசியல் நம்பிக்கையை அதிகரிப்பது, பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை ஆழமாக்குவது, பாதுகாப்பு உத்தரவாதத்தை வலுப்படுத்துவது, ஊடக பொறுப்பைத் தெளிவுப்படுத்துவது, எண்ணியல் பொருளாதாரத்தை வளர்ப்பது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து, இருநாடுகளின் அரசியல், பொருளாதாரம், வணிகம், கல்வி, ஊடகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த விருந்தினர்கள் விவாதம் நடத்தி, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இக்கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ காணொளி வழியாக உரை நிகழ்த்துகையில், இவ்வாண்டு சீன-ஜப்பான் உறவு இயல்புக்கு திரும்பிய 50ஆவது ஆண்டு நிறைவாகும். அடுத்த ஆண்டு சீன-ஜப்பான் அமைதி உடன்படிக்கை உருவாக்கப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவு வரவேற்கப்பட உள்ளது. இருதரப்பும் நம்பகத்தன்மையுடன் பழகி, ஒத்துழைப்புடன் கூடிய கூட்டு வெற்றியில் நிலைத்து நின்று, சரியான திசையில் இருநாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்றி, ஆசிய வளர்ச்சிக்கு புதிய எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.