மத்திய கிழக்கு நாடுகள் சீனாவுடன் ஒத்துழைப்புக்கு காரணங்கள்
2022-12-08 11:20:35

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 7 முதல் 10ஆம் நாள் வரை, சௌதி அரேபியாவில் முதலாவது சீனா-அரபு நாடுகள் உச்சி மாநாட்டிலும் சீன வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்வதுடன், அந்நாட்டில் அரசு முறை பயணத்தையும் மேற்கொள்கிறார். சீன-அரபு நாட்டுறவில் முக்கியத்துவம் வாய்ந்த இப்பயணம், இருதரப்பு நெடுநோக்குக் கூட்டாளியுறவு வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை தரும்.

மத்திய கிழக்கு நாடுகள் சீனாவுடன் நெருங்கிய ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு இரு முக்கியக் காரணங்கள் உண்டு.

முதலாவது, இருதரப்புகளுக்கிடையிலான அரசியல் நம்பிக்கை ஒத்துழைப்புக்கு உறுதியான அடிப்படையை வழங்கியுள்ளது.

இரண்டாவது, இருதரப்புகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு வாய்ப்புகள் அதிகம்.

கடந்த சில ஆண்டுகளில் மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளால், அந்த நாடுகளின் நம்பிக்கையை அமெரிக்கா இழந்துள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகள் நீண்டகாலமாக நம்பத்தக்க நெடுநோக்குக் கூட்டாளியாக சீனா திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.