சீன அரசு தலைவரும் சௌதி அரேபிய இளவரசரும் சந்திப்பு
2022-12-09 09:50:14

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் டிசம்பர் 8ஆம் நாள் ரியாத் அல் யமாமா அரண்மனையில் சௌதி அரேபிய பட்டத்து இளவரசரும் தலைமை அமைச்சருமான முகமெத் பின் சல்மான் பின் அப்தெல் அசிஸ் அல் சௌதியுடன் சந்தித்து பேசினார்.

சௌதி அரேபிய மன்னர் சல்மானின் சார்பாக முகமெத், ஷி ச்சின்பிங்கிற்கு வரவேற்பு தெரிவித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதற்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக ஷி ச்சின்பிங் மீண்டும் பதவி ஏற்றதற்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அரபு உலகம் மற்றும் முஸ்லிம் உலகத்தின் முக்கிய உறுப்பு நாடாகவும் மத்திய கிழக்கு பகுதியில் சீனாவின் முக்கிய கூட்டாளியாகவும் சௌதி அரேபியா திகழ்கின்றது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார். இச்சந்திப்புக்கு பிறகு சீன-சௌதி அரேபிய கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.