பன்னாட்டுச் சமூகத்தில் பெரும் ஆதரவுகளைப் பெற்றுள்ள சீனாவின் கருத்துக்கள்
2022-12-09 12:39:05

20 நாடுகளைச் சேர்ந்த 4000 மக்களிடையில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றின்படி, முழு மனிதகுலத்துக்கும் சீனா முன்வைத்த “அமைதி, வளர்ச்சி, நியாயம், நீதி, ஜனநாயகம்” ஆகியவற்றைக் கொண்ட விழுமியங்களை 94.2 விழுக்காட்டினர் பாராட்டியுள்ளனர். மனிதருக்கான பொது எதிர்காலச் சமூகம் பற்றிய சீனாவின் கருத்தை 85 விழுக்காட்டினர் பாராட்டியுள்ளனர்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சௌதி அரேபிய பயணத்தை ஒட்டி, சீன ஊடகக் குழுமத்தின் CGTN சிந்தனை கிடங்கு, உலக ஊடக மற்றும் தொடர்புக்கான சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் எப்ஸ்டெய்ன் ஆய்வு மையத்துடன் இணைந்து இக்கருத்து கணிப்பை நடத்தியது.

கடந்த 10 ஆண்டுகளில் 20 அரபு நாடுகள் சீனாவுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளன. 17 அரபு நாடுகள் சீனாவின் உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்புக்கு ஆதரவளித்துள்ளன. உலகளவில் கருத்து கணிப்பில் கலந்து கொண்டவர்களில்  78.4 விழுக்காட்டினர் இம்முன்னெடுப்பை ஒப்புக்கொண்டு, வளர்ச்சியானது உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முக்கிய வழிமுறை என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் 85.6 விழுக்காட்டினர் சீனாவின் உலகளாவிய பாதுகாப்பு முன்னெடுப்பை ஒப்புக் கொண்டதோடு, பாதுகாப்பானது வளர்ச்சிக்கான முன்நிபந்தனை எனக் குறிப்பிட்டுள்ளனர்.