இந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 4 தொகுதிகள் 2027ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும்
2022-12-09 17:32:21

தென் தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட மீதமுள்ள நான்கு தொகுதிகள், 2027 ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என இந்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற மேலவையில் தலைமைஅமைச்சர் அலுவலகத்தில் உள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த தகவலை தெரிவித்தார்.

கூடங்குளம் தளத்தின் மொத்த உற்பத்தி திறன் 6,000 மெகாவாட் ஆகும். இதில் தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட ஆறு அணு உலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.