மாண்டஸ் புயல் நெருங்கி வருவதால், இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்
2022-12-09 17:31:45

மாண்டஸ் புயல் முன்னேறி வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, மாண்டஸ் புயல் மணிக்கு 65-75 கிமீ வேகத்தில்,வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கடக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது. மேலும், இப்புயல் நள்ளிரவில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரித்தது.

இதன் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்களில் மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துமாறு அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.