உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் தலைவர்களுடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
2022-12-09 09:59:07

7ஆவது 1+6 வட்ட மேசை பேச்சுவார்த்தையில் பங்கேற்க சீனாவுக்கு வந்த உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் ஒகோஞ்சோ இவேலா ஆகியோரை சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் 8ஆம் நாள் ஆன்ஹுய் மாநிலத்தின் ஹூவாங்ஷான் நகரில் முறையே சந்தித்துரையாடினார்.

மால்பாஸைச் சந்தித்துப் பேசுகையில், சீனா உலக வங்கியுடன் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கி உலக பொருளாதாரத்தில் எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சினைகளைக் கூட்டாகச் சமாளிக்க விரும்புவதாக லீக்கெச்சியாங் கூறினார்.

ஜார்ஜீவாவுடனான கலந்துரையாடலின் போது, உயர் நிலையிலான வெளிநாட்டுத் திறப்பை சீனா தொடர்ந்து முன்னேற்றி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் ஒட்டுமொத்த கொள்கையின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி உலகளாவிய அறைகூவலை எதிர்கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஒன்றுக்கு ஒன்று சலுகை மற்றும் நன்மை பற்றிய உலக வர்த்தக அமைப்பின் கோட்பாட்டில் ஊன்றி நிற்கும் சீனா, சொந்தப் பொருளாதார வளர்ச்சி நிலைமை மற்றும் திறமைக்குப் பொருத்தமான பொறுப்புகளைச் ஏற்றுக்கொள்ளும் என்றும் இவேலாவுடன் பேசிய போது லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

இச்சந்திப்புகளின் போது மூவரும் சீனத் தரப்புடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த விருப்பம் தெரிவித்தனர்.