உலகத்தின் முதலாவது C919 விமானத்தின் முதலாவது பயணம்
2022-12-09 15:30:57

உலகளவில் முதலாவது C919 என்னும் பெரிய ரக பயணியர் விமானம் டிசம்பர் 9ஆம் நாள் முற்பகல் China Eastern விமான நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்ட பிறகு, ஷாங்காய் புடொங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, ஷாங்காய் ஹொங்ச்சியௌ விமான நிலையத்தைச் சென்றடைந்தது.

C919 விமானம், சீனாவின் முதலாவது பெரிய ரக பயணியர் விமானமாகும். இவ்விமானத்துக்கான ஒப்படைப்பு, சீனாவின் பெரிய ரக விமான லட்சியத்தில் மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். சீனா தற்சார்பாக ஆராய்ந்து தயாரித்துள்ள ஜெட் விமானம் சீனப் பயணியர் விமானப் போக்குவரத்து சந்தையில் முதன்முறையாகச் சேவைபுரியும் என்பதை இது வெளிக்காட்டியுள்ளது.