சீனா திறப்பை தொடர்ந்து விரிவாக்கும்:லீக்கெச்சியாங்
2022-12-10 20:07:55

சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் 1+6 வட்ட மேசைப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற முக்கிய சர்வதேச பொருளாதார நிறுவனங்களின் பொறுப்பாளர்களுடன் இணைந்து 9ஆம் நாள் அன்ஹூய் மாநிலத்தின் ஹூவாங்ஷேன் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துரைடாடினார். லீக்கெச்சியாங் பேசுகையில், பலதரப்புவாதத்தைப் பேணிகாத்து பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி உலகப் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான நம்பிக்கை இப்பேச்சுவார்த்தை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் திறப்பு சீனாவின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல உலகிற்கும் துணையாக இருக்கும். உயர்ந்த நிலைத் திறப்பை சீனா தொடர்ந்து முன்னேற்றி அமைப்பு முறை ரீதியிலான திறப்பை நிதானமாக விரிவாக்கும் என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார்.  

1+6 வட்ட மேசைப் பேச்சுவார்த்தையின் பங்களிப்பை அதில் கலந்து கொண்ட சர்வதேச பொருளாதார நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் ஆக்கப்பூர்வமாக மதிப்பிட்டு சீனாவுடன் கூட்டாளியுறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அவர்கள் கூறினர்.