சீனாவுடனான ஒத்துழைப்பு மிக முக்கியம்:நியூசிலாந்து
2022-12-10 17:31:02

நியூசிலாந்து சீனாவுடன் ஒத்துழைப்பை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும், சீனாவுடனான சீரான உறவு நியூசிலாந்தின் செழுமைக்கு உத்தரவாதம் செய்யும் என்றும் அந்நாட்டுத் தலைமை அமைச்சர் ஜெசிந்தா ஆர்டெர்ன் 9ஆம் நாள் ஓக்லாண்ட் நகரில் தெரிவித்தார். நியூசிலாந்து-சீன தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சி அன்று ஓக்லாண்டில் நடைபெற்றது. அது, நியூசிலாந்து அரசு, நியூசிலாந்து-சீன உறவு மேம்பாட்டு கவுன்சில், நியூசிலாந்து-சீன வர்த்தக சங்கம் ஆகிய தரப்புகளால் நடத்தப்பட்டது. 

சீனாவுடனான சீரான உறவு நியூசிலாந்தின் செழுமையை உறுதி செய்யும் என்பது கடந்த சில ஆண்டுகளில் இரு தரப்பு பொருளாதாரம் மற்றும் வர்த்தக பரிமாற்றத்தால் நிரூபிக்கப்பட்டது என்று ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.