சீனா—வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் உறவில் புதிய வாய்ப்பு
2022-12-11 18:14:26

முதலாவது சீனா—வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் உச்சி மாநாடு 9ஆம் நாள் ரியாத் நகரில் நடைபெற்றது. சீனா மற்றும் வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து முதன்முறையாக ஒன்றுகூட்டி விவாதித்தனர். நெடுநோக்குக் கூட்டுறவை வலுப்படுத்த இரு தரப்பும் முடிவுக்கு வந்துள்ளன. இது, நடப்பு உச்சி மாநாட்டில் பெறப்பட்டுள்ள மிகச் சிறப்பான சாதனையாகவும், சீனாவும் வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சிலும் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் புதிய கட்டத்தைத் துவக்கி வைப்பதாகவும் அமைந்தது.

கொந்தளிப்பான சர்வதேச நிலைமையில், உலகப் பொருளாதாரம் மேலும் பலவீனமாகி வருகிறது. குறிப்பாக, தானிய மற்றும் எரியாற்றல் பாதுகாப்புப் பிரச்சினைகளால் முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையில், சீனாவும் வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சிலின் உறுப்பு நாடுகளும், உலகளாவிய அறைகூவல்களை எதிர்கொள்கின்றன. அதேவேளையில், தேசிய வளர்ச்சியை நனவாக்கும் கடமையை கொண்டுள்ள இரு தரப்புக்கும், ஒத்துழைப்பை வலுப்படுத்தும். இதனால், இத்தகைய பின்னணியில், முதலாவது சீனா—வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் உச்சி மாநாடு நடைபெற்றது. மேலும், இரு தரப்புகளுக்கிடையே நெடுநோக்குக் கூட்டாளியுறவை நிறுவுவது என்ற முடிவு, உலகின் அமைதியான வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் கூறுகையில், சீனாவுடன் இணைந்து, நடப்பு உச்சி மாநாட்டில் பெறப்பட்டுள்ள சாதனைகளை நடைமுறைப்படுத்தி, முக்கியத் துறைகளின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து ஆழமாக்கி, இரு தரப்பு மக்களுக்கு நன்மை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தது.

புதிய வரலாற்று தொடக்க புள்ளியில் நின்று, பழமையான மற்றும் இளமையான சீன- வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சிலின் உறவில் மேலும் பெரும் புத்துயிர் பெறப்படும் என நம்புகின்றோம்.