© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன-அரபு நாடுகள் உச்சிமாநாடு, இருதரப்பு உறவின் வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும். இது, சீன-அரபு நாடுகளுக்கிடையேயான நட்பு ஒத்துழைப்பு அருமையான எதிர்காலத்தை நோக்கி செல்வதை வழிநடத்துகிறது.
முதலாவது சீன-அரபு நாடுகள் உச்சிமாநாட்டின் ரியாத் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை வெளியிட்டு, புதிய யுகத்தில் பகிர்வு எதிர்காலம் கொண்ட சீன – அரபு நாடுகள் சமூகத்தை உருவாக்க இரு தரப்பும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன. இது இவ்வுச்சிநாட்டில் கிடைத்த மிக முக்கிய அரசியல் சாதனையாகும்.
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், அரபு நாடுகளுடன் இணைந்துக் கூட்டாக நடத்திய முதலாவது தலைவர்கள் கூட்டம் இதுவாகும். இருதரப்பு உறவை புதிய நிலைக்குக் கொண்டு வருவதென முடிவு, பாரம்பரிய நட்புறவின் தொடர்ச்சியாகவும் எதிர்காலத்தின் புதிய தொடக்கமாகவும் விளங்குகிறது.
வளர்ச்சி ஆதரவு, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பசுமை மற்றும் புதுமையாக்கம், எரியாற்றல் பாதுகாப்பு, நாகரிகங்களின் உரையாடல், இளைஞர்களின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகிய 8 துறைகளில் இரு தரப்பும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும். அரபு நாடுகளுடன் இணைந்து கூட்டு வளர்ச்சி பெறுவதற்கான சீனாவின் மனமார்ந்த விருப்பத்தை இது வெளிகாட்டியுள்ளது.
பெரிய மாற்றங்களுடன் இருக்கும் சர்வதேச சூழலிலும் நெடுநோக்கு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய பின்னணியிலும், அரபு நாடுகள் மற்றும் சீனாவுக்கு பரந்துபட்ட எதிர்காலம் உண்டு என்று அரபு நியூஸ் எனும் பத்திரிகை 9ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளது.