2022ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கும் விழா
2022-12-11 17:29:11

2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் விழா 10ஆம் நாள் சனிக்கிழமை  சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் பொருளியல் ஆகிய 5  பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு கோடி ஸ்வீடிஷ் க்ரோனா மதிப்புள்ள பரிசுத் தொகை இவ்வாண்டு வழங்கப்பட்டது.

கோவிட்-19 தொற்று நோய் பாதிப்பினால், 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு பரிசளிக்கப்படும் விழா இணையம் வழியாக நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளில் பரிசு பெற்றவர்களும் இவ்வாண்டின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.