2 கோடிக்கும் அதிகமான பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய உதவி தேவை
2022-12-11 17:17:02

பாகிஸ்தானில் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மனிதநேய உதவியைச் சார்ந்திருப்பதுடன் வாழ்ந்து வருகின்றனர். குளிர்காலம்  வருவதுடன், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று ஐ.நா மனிதநேய விவகாரத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் 9ஆம் நாள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் பெருமளவிலான  வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பின், அந்நாட்டிற்கு 81.6 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதியுதவி திட்டத்தை மனிதநேய அமைப்புகள் வகுத்தன. ஆனால் இதுவரை 23 சதவீத நிதித்தொகை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என்று இந்த அலுவலகம் தெரிவித்தது.