பொருள்சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புப் பணி பற்றிய ஷி ச்சின்பிங்கின் கட்டளை
2022-12-12 15:53:41

பொருள்சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புப் பணி தொடர்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் கட்டளையிட்டுள்ளார். அக்கட்டளையில், சீனப் பாரம்பரிய தேயிலை உற்பத்தித் தொழில் நுட்பம் மற்றும் தொடர்புடைய பழக்க வழக்கங்களை மனித பொருள் சாரா பண்பாட்டு மரபு செல்வ பட்டியலில் யுனேஸ்கோ சேர்த்துள்ளதாகவும், சீனத் தேயிலைப் பண்பாட்டை வெளிக்கொணர்வதற்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொருள்சாராப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பாதுகாப்பில் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொது மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரிக்கும் பண்பாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்து, பண்பாட்டு நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

 

முன்னதாக, நவம்பர் 29ஆம் நாள் மொராக்கோவின் ராபத் நகரில் நடைபெற்ற யுனேஸ்கொவில் பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்புக்கான அரசுகளுக்கிடை கவுன்சிலின் 17ஆவது நிரந்தரக் கூட்டத்தில் சீனப் பாரம்பரிய தேயிலை உற்பத்தித் தொழில் நட்பமும் அதன் தொடர்புடைய பழக்க வழக்கங்களும் மனித பொருள் சாராப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.