சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக்க ஒத்துழைப்புக்கு இரு நாட்டு பிரமுகர்கள் வேண்டுகோள்
2022-12-12 16:54:30

அமெரிக்காவிலுள்ள சீனப் பொது வர்த்தக சங்கத்தின் சிகாகோ கிளை 2022ஆம் ஆண்டு கூட்டத்தை அண்மையில் நடத்தியது. இக்கூட்டத்தில், சீன-அமெரிக்க அரசியல் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இரு தரப்புகளுக்கிடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று பயனளிக்கும் கூட்டு வெற்றி பெற வேண்டுமென அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சின் காங் உரைநிகழ்த்தியபோது, கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவில் முதலீடு செய்து வரும் சீன நிறுவனங்கள், உள்ளூர் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றன. சீன-அமெரிக்க வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறையில் ஒன்றுக்கொன்று பயனளிக்கும் கூட்டு வெற்றி பெறுவதை இது வெளிக்காட்டுகின்றது என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்காவிலுள்ள சீன நிறுவனங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, இரு நாடுகளுக்கிடையே பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புப் பாலமாக பங்காற்ற வேண்டும் என்றும், அமெரிக்காவின் மத்திய மற்றும் மாநில அரசுகளும் சீன நிறுவனங்களுக்கு நியாயமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் தெரிவித்தார்.