ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான கொசோவோ விண்ணப்பம்
2022-12-12 15:28:21

அமெரிக்க அரசியல் செய்தி வலைத்தளமான பொலிடிகோ 11 ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி,  அடுத்த சில நாட்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தை கொசோவோ அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது என்று கொசோவோ அதிகார வட்டாரத்தின் முதல் துணை தலைமையமைச்சர் பெஸ்னிக் பிஸ்லிம் கூறினார்.

கொசோவோ ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக மாறுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிக்கு இன்னும் சிறிது நேரம் தேவை. 2030ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வது ஆரம்ப இலக்காகும் என்றார் அவர்.

கொசோவோ அமெரிக்கா மற்றும் அதன் சில நட்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், ரஷியா உள்ளிட்ட பல நாடுகள் கொசோவோவின் சுதந்திரத்தை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

சைப்ரஸ், கிரேக்கம், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்பெயின் ஆகிய ஐந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கொசோவோவின் சுதந்திரத்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.