உலகின் இயற்கை பாதுகாப்புக் கூட்டணி பெயர் பட்டியல் புதுப்பித்தல்
2022-12-12 10:46:26

உலகின் இயற்கை பாதுகாப்புக் கூட்டணி பெயர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டதை , இக்கூட்டணி 10ஆம் நாள் கடனாவின் மன்ட்ரீல் நகரில் அறிவித்தது. சீனாவின் ஹுவாங் குவோ ஷூ காட்சி தலம், ஷேன் நுண் ஜியா தேசிய பூங்கா முதலிய 11 புகலிடங்கள், இப்பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

கோப்ஸ் 15 மாநாட்டின் 2ஆவது கட்டக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட இப்பட்டியலில் மொத்தம் 18 புகலிடங்கள் சேர்க்கப்பட்டன. இதுவரை இப்பெயர் பட்டியலில் மொத்தம் 77 இயற்கை புகலிடங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆயிரக்கணக்கான இயற்கைப் புகலிடங்களின் கட்டுமானத்துக்கு சீனா நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றது. சர்வதேச சமூகம், சீனாவுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பொது நலன்களைப் பெறலாம் என்று உலகின் இயற்கை பாதுகாப்புக் கூட்டணியின் உயர்நிலை அதிகாரி ஜேம்ஸ் பேட்டியளித்த போது தெரிவித்தார்.