ரஷியா-கசகஸ்தான்-உஸ்பெக்ஸ்தான் எரிவாயு கூட்டணி
2022-12-12 10:34:34

தற்பொது விவாதத்தில் உள்ள ரஷியா, கசகஸ்தான், உஸ்பெக்ஸ்தான் முத்தரப்பு எரிவாயு கூட்டணித் திட்டம் மேற்கு நாடுகள் கூறிய அரசியல் விளையாட்டு அல்ல என்று ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் 10ஆம் நாள் தெரிவித்தார்.

ரஷியா, கசகஸ்தான், உஸ்பெக்ஸ்தான் ஆகியவை பொதுவான இயற்கை எரிவாயு போக்குவரத்து அமைப்பைக் கொண்ட அண்டை நாடுகளாகும். மூன்று நாடுகள், பொதுவான மேம்பாடுகளைப் பயன்படுத்தி, தேசிய நலன்களுக்கு ஏற்ப நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், நவம்பர் இறுதியில் கிரெம்ளின் மாளிகையில் கசகஸ்தான் அரசுத் தலைவர் காசிம் ஜோமல்ட் டோக்காயேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷியா-கசகஸ்தான்-உஸ்பெக்ஸ்தான் எரிவாயு கூட்டணியை நிறுவ  ரஷியா விரும்புவதாக புதின் தெரிவித்தார்.