புதிய பதிவை எட்டியுள்ள சீன தானிய உற்பத்தியளவு
2022-12-12 11:31:48

2022ஆம் ஆண்டுக்கான தானிய விளைச்சல் பற்றிய அறிக்கையை சீனத் தேசிய புள்ளிவிவர ஆணையம் 12ஆம் நாள் வெளியிட்டது. அதில், 2022ஆம் ஆண்டில் சீனாவிலுள்ள 31 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தானியங்கள் மொத்த எடை 68 ஆயிரத்து 655 கோடி கிலோகிராம் எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.5 விழுக்காடு அதிகரித்து புதிய பதிவை உருவாக்கியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் சீனாவின் தானிய உற்பத்தி அளவு, 65 ஆயிரம் கோடி கிலோகிராம் என்ற அளவை நிலைநிறுத்தியுள்ளது. இது தவிர, சீனாவில் தானியம் பயிரிடப்படும் நிலப்பரப்பு 11 கோடியே 83 இலட்சத்து 32 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இப்பரப்பளவு 0.6 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.