ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் நான்சிங்கில் படுகொலை செய்ததன் 85ஆவது ஆண்டு நினைவு நாள்
2022-12-13 10:36:04

டிசம்பர் 13ஆம் நாள், ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் நான்சிங்கில் படுகொலை செய்ததன் 85ஆவது ஆண்டு நினைவு நாளாகும். இன்று காலை 8 மணிக்கு, ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களால் நாஞ்சிங் படுகொலையில் பலியானவர்களின் நினைவு மண்டபத்தில் தேசியக் கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் அரைக்கம்பத்தில் கொடி இறக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

1937ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள், ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் நான்ஜிங்கில் நுழைந்து, 40 நாட்கள் நீடித்த மிகவும் கொடிய படுகொலையை செய்தனர். அதில் 3 லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்தனர்.

2014ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள், சட்டமியற்றல் வடிவில், ஆண்டுதோறும் டிசம்பர் 13ஆம் நாள், நாஞ்சிங் படுகொலையில் பலியானவர்களுக்கான தேசிய நினைவு நாளாக கடைபிடிக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டது.