ஸப்போரிஷியா அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு பற்றிய கலந்தாய்வு
2022-12-13 10:50:48

அணு மின் நிலையம் தாக்குதல்களால் அச்சுறுத்தப்படுவதைத் தடுக்க ரஷியாவும் சர்வதேச அணு ஆற்றல் நிறுவனமும் இணைந்து ஸப்போரிஷியா அணுமின் நிலையத்தின் பாதுகாப்புக் குறித்துக் கலந்தாய்வு நடத்தி வருவதாக 12ஆம் நாள் ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் வெர்ஷினென் தெரிவித்தார்.

அணு மின் நிலைய விபத்துக்கள் உள்ளூர் மக்களை மட்டுமல்லாது, பிற பகுதிகளையும் பாதிக்கும். எனவே, அணு மின் நிலையத்தின் கட்டுப்பாட்டை ரஷியா கைவிட வேண்டும் என்ற சர்வதேச அணு ஆற்றல் அமைப்பின் அறிக்கையை ரஷிய வெளியுறவு அமைச்சகம் உறுதியாக எதிர்ப்பதாகவும் வெர்ஷினென் தெரிவித்தார்.