© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டவங்கள் இவ்வாரம் நடைபெற உள்ளன. எந்த உலகக் கோப்பையை வெல்லும் என்று அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது.
முன்னதாக, இக் கால்பந்துப் போட்டியை வைத்து மேற்கத்திய நாட்டு ஊடகங்கள் அரசியல் செய்ய முயன்றன.
அரபு நாடுகளில் கால்பந்து உலக கோப்பை போட்டியை நடத்திய முதலாவது நாடு என்ற பெருமையை கத்தார் பெற்றுள்ளது. ஆனால், இந்த நாடு, போட்டி நடத்துவதற்கான விண்ணப்பம் சமர்பித்தது முதல் மேற்கத்திய நாடுகளில் இருந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்த தொடங்கப்பட்டன. கத்தார் அரசு பலமுறை அதைத் தெளிவுபடுத்திய போதிலும், மேற்கத்திய செய்தி ஊடகங்கள் அதை பொருட்படுத்தாமல் செயல்பட்டன.
மனித உரிமைப் பிரச்சினையில் மேற்குலகம் எடுத்து வரும் இரட்டை நிலைப்பாடு மீண்டும் தெளிவானது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், அரபு நாடுகளில் தொழிலாளர்களின் மனித உரிமைகள் மீது அக்கறை காட்டுகின்றன. ஆனால், இந்நாடுகள் மத்திய கிழக்குப் பகுதியில் இடைவிடாமல் மோதலை ஏற்படுத்தி பெரிய அளவில் மனிதநேய பேரிடர்களை உருவாக்குவது ஏன் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
உலகளாவிய உச்சநிலை விளையாட்டு நிகழ்ச்சியை கத்தார் வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளது உலக மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. விளையாட்டின் குறிக்கோளில் தான் கவனம் செலுத்த வேண்டும். கத்தார் உலகக் கோப்பைப் போட்டியில் மேற்கத்திய மனித உரிமைக் காவலரை வரவேற்கவில்லை. எழுந்துள்ள இரைச்சல்கள் கால்பந்துப் போட்டியின் வசீகரத்தைப் பாதிக்காது.