சீன-அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானது
2022-12-13 17:52:00

சீன வெளியுறவுத்துறைத் துணை அமைச்சர் ஷியேஃபெங் 11 மற்றும் 12  ஆகிய  நாட்களில் ஹெபேய் மாநிலத்தின் லாங்ஃபாங் நகரில் சீனாவில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய பசிபிக் விவகாரத்துக்கான துணை அமைச்சர் டேனியல் கிரிடன்பிரிங்க், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புக் குழுவின் சீன விவகாரங்களுக்கான உயர் இயக்குநர் லாவ்ரா ரோசன்பெர்க் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தை  நேர்மையாகவும் ஆழமாகவும் ஆக்கபூர்வமாகவும் இருந்ததாக இரு தரப்பும் தெரிவித்தன. ஒன்றுடன் ஒன்று பரிமாற்றங்களை நிலைநிறுத்தி, இரு நாட்டுத் தலைவர்களின் முக்கியப் ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்துவதை இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங்வேன்பின் 13ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.