ரஷியா மீதான புதிய சுற்று தடை நடவடிக்கை பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை
2022-12-13 12:37:39

டிசம்பர் 12ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்குப் பொறுப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி புரேலி கூறுகையில், ரஷியாவின் மீது 9ஆவது சுற்று தடை நடவடிக்கை மேற்கொள்வது பற்றிய விவாதத்தில் உறுப்பு நாடுகளிடையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று ஏற்றுக்கொண்டார்.

இந்தப் பிரச்சினை பற்றி தொடர்ந்து விவாதிக்கவுள்ளதாகவும், இந்த வார இறுதிக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.