அமெரிக்காவிலிருந்து வெளியேறும் ரஷிய தூதாண்மை அதிகாரிகள்
2022-12-14 11:07:01

சில ரஷிய தூதாண்மை அதிகாரிகள் 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டள்ளனர் என்று ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் லியாபுகோவ் 13ஆம் நாள் தெரிவித்துள்ளார்.

தூதாண்மைப் பணியின் நிதானத்தைப் பேணிக்காக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாஸ்கோ பல முறை கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், தூதாண்மைப் பணியை ரஷியாவுக்கு நிர்பந்திக்கும் ஒரு வசதியாக அமெரிக்கா பயன்படுத்தி வருகின்றது என்று அவர் தெரிவித்தார். இரு நாடுகளின் தூதாண்மை பணியாளர்கள் எண்ணிக்கையில் அதிகபட்ச எல்லையை வகுக்கலாம் என்று ரஷியா முன்மொழிந்தது. இந்த முன்மொழிவும் அமெரிக்காவின் பதிலைப் பெறவில்லை என்றும் லியாபுகோவ் குறிப்பிட்டார்.