வர்த்தகத் துறையில் அமெரிக்காவுக்கு சீனா வேண்டுகோள்
2022-12-14 15:22:40

சீனாவுக்கான சிலிக்கான் சில்லு உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி மீது அமெரிக்கா மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு எதிராக சீனா டிசம்பர் 12ஆம் நாள், உலக வர்த்தக அமைப்பின் சர்ச்சை தீர்வு அமைப்புமுறையின் மூலம் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பாக சீன வணிக அமைச்சகத்தின் ஒப்பந்தம் மற்றும் சட்டத் துறை பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், சட்ட வழிமுறையின் மூலம் சொந்த சட்டப்பூர்வ உரிமை நலனைப் பேணிக்காக்கும் என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்கா ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கையைத் தாறுமாறாகப் பயன்படுத்தி, இயல்பான சர்வதேச வர்த்தகத்தைத் தடை செய்து வருகிறது. வர்த்தக பாதுகாப்புவாதச் செயல் இதுவாகும். அமெரிக்கா தவறான செயல்களைக் காலதாமதமின்றி திருத்தி, சீன-அமெரிக்க இயல்பான வர்த்தகத்தையும் சில்லுகள் உள்ளிட்ட முக்கிய உலக தொழிற்துறை மற்றும் விநியோக சங்கிலியைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.