ஆப்பிரிக்காவுக்கு ஆதரவு அளப்பது பற்றிய அமெரிக்காவின் கொள்கை நடைமுறைக்கு வரவில்லை:ஆப்பிரிக்க அறிக்கை
2022-12-14 11:06:00

அமெரிக்க-ஆப்பிரிக்க உச்சி மாநாட்டை முன்னிட்டு, உலகப் பேச்சுவார்த்தை ஆய்வகம் எனும் தென்னாப்பிரிக்காவின் புகழ்பெற்ற சிந்தனைக் கிடங்கு உலக ஒழுங்குமுறையின் மாற்றத்தில் பைடன் அரசும் ஆப்பிரிக்காவும் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஆப்பிரிக்கக் கொள்கை தொடர்ந்து பேரரசுகளுக்கிடையிலான போட்டியில் கவனம் செலுத்தி, ஆப்பிரிக்காவுக்குப் போதிய மதிப்பு அளிக்கவில்லை என்றும், நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் கவனம் செலுத்தவில்லை என்றும் இவ்வறிக்கையின் வெளியீட்டு விழாவில் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆப்பிரிக்காவில் சீனா மற்றும் ரஷியாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதே அமெரிக்கக் கொள்கையின் உண்மையான முக்கியமாகும். தான் பரப்புரை செய்த ஆப்பிரிக்காவுடனான நட்புறவு அல்ல என்று இவ்வறிக்கையின் தலைமை எழுத்தாளர் முதான்பு குறிப்பிட்டார்.

ஆப்பிரிக்கா விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் புதிய நெடுநோக்குத்திட்டத்தில் புதிய அம்சம் ஒன்றும் இல்லை என்று நியூயார்க் சிராகஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கான்பெல் கூறினார். ஆப்பிரிக்காவில் தனது ராணுவ சாரா நிலைகளை அமைப்பது அமெரிக்காவின் இலக்காகும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.